54வது வாட்டி உடைஞ்சு போன சென்னை விமான நிலைய மேற்கூரை... இந்த முறை 2 ஊழியர்கள் காயம்!
ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 54வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு விமான நிலைய ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 13 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 18 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 15 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்தும், ஒரு முறை விளக்கு கண்ணாடி உடைந்து விழுந்தும் உள்ளன. இதுவரை 52 முறை நடைபெற்று உள்ள இந்த உடைப்பு சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

நேற்று 53:
இந்த நிலையில் 53 ஆவது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி அருகே 13 ஆவது நுழைவு வாயிலில் உள்ள 7 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு ஒன்று நேற்று மதியம் திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.

மும்பை பயணி காயம்:
அப்போது அந்த வழியாக சென்ற மும்பை பயணி ஒருவரின் கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அள்ளிச் சென்ற அதிகாரிகள்:
சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், நொறுங்கி கிடந்த கண்ணாடிகளை அகற்றினார்கள். மேலும் காயம் அடைந்த பயணிக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று 54:
இந்நிலையில் இன்று சென்னையில் மழை கொட்டி வருகின்ற நிலையில் உள்நாட்டு முனையம் அமைந்துள்ள பகுதியில் இன்று மீண்டும் மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்தது.

காயமடைந்த ஊழியர்கள்:
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் இரண்டு பேர் இவ்விபத்தில் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வழக்கம்போல:
இந்நிலையில் வழக்கம்போல இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 54வது முறையாக நடந்துள்ள இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னும் சொல்றதுக்கில்லை!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications