சென்னைவாசிகளே செல்போன் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? கவலைய விடுங்க
சென்னை: வெள்ளத்தால் தவிக்கும் சென்னை மக்கள் ரீசார்ஜ் செய்வது கஷ்டம் என்பதால், செல்போன் நிறுவனங்கள், அவர்களுக்கு கடனாக ரீசார்ஜ் செய்து கொடுக்க முன்வந்துள்ளன.
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏர்டெல் தனது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.30க்கான ரீசார்ஜை கடனாக செய்துதரும். இதற்கு இரு நாட்கள் வேலிடிட்டி இருக்கும். அவசர தேவைக்காக 30 எம்.பி அளவுக்கு செல்போன் இணையதள டேட்டாவும் வழங்கப்படும்.

போஸ்ட் பெய்டு கஸ்டமர்கள், மற்றும் லேண்ட் லைன் கஸ்டமர்கள், பில் தொகையை செலுத்த வேண்டிய காலம் கடந்தும் கட்டிக்கொள்ளலாம். அபராதம் கிடைாயது. சென்னையில் தொலைதொடர்பு வசதி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏர்டெல் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பிரச்சினை இருக்கும் பகுதிகளில் அது சரி செய்யப்படும். இவ்வாறு ஏர்டெல் கூறியுள்ளது.
வேண்டியவர்களுக்கு தங்கள் மூலமாக நண்பர்களோ, உறவினர்களோ ரீசார்ஜ் செய்து உதவலாம் என பேடிஎம் நிறுவனம், அறிவித்துள்ளது. ஐடியா ரூ.10 அளவுக்கு ரீசார்ஜ் கடன் தருவதாக அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிய அந்தந்த செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
சென்னை மக்களே
உங்கள் செல்பன்ல பேலன்ஸ் இல்லைனு கவலை படாதிங்க எனக்கு மென்சன் பன்னுங்க நான் ரிசார்ஜ் பன்னுறேன் முடிந்தளவு #RT
#chennairains
— #Mini Recharge (@iam_sullan) December 2, 2015 இவைபோக, தேவைப்படுவோர் எங்களை தொடர்புகொண்டால் ரீசார்ஜ் செய்து தருவோம் என்று பல டிவிட்டர்வாசிகள் உதவிக்கரம் நீட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications