சரத்குமார் மீண்டும் நடிப்பதா.. ரொம்ப வேதனையா இருக்கு.. கட்சியை விட்டு விலகிய ச.ம.க. நிர்வாகி!
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து ஒருவர் விலகி விட்டார்.
கட்சியை விட்டு விலகிய நபரின் பெயர் பன்னீர் செல்வம். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கட்சியிலிருந்து விலகியது குறித்து பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தை வழிநடத்தும் அரசியல் தலைவராக விஸ்வரூபம் எடுப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் முழுநேர அரசியல்வாதியாக முனைப்போடு செயல்பட வேண்டிய நேரத்தில், மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன். அதுவே, எனது தொழில் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது என்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே சமகவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி ஏற்கனவே இரண்டாக உடைந்து விட்டது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒரு புதிய கட்சி சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பிறந்தது. அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தனர். அதேசமயம், சரத்குமாரையும் கூப்பிட்டு தனது கூட்டணியில் சேர்த்து ஷாக் கொடுத்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பும், அதன் பின்னரும் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பலரும் வெளியேறிப் போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியை விட்டு விலக என்ன காரணம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்பார்களோ என்னவோ.. எப்படியெல்லாம் யோசிச்சு விலகுறாங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications