2வது இடத்துக்கு தள்ளப்பட்ட ரஜினி.. தமிழகத்தின் அபிமான நடிகர் அஜித்: கருத்துக்கணிப்பு
சென்னை: லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தின் ஃபேவரைட் நடிகர் அஜித் என்பது தெரியவந்துள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான 'மக்கள் ஆய்வு' எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.
கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததை போலவே, நடிகர்கள் குறித்தும், இந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது.
நடிகர்கள் தொடர்பான கருத்துக்கணிப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த்துக்கு சிறுவர் முதல் பெரியவர் வரையில் ஆதரவு உள்ளது அறிந்ததே. ஆனால், அந்த இடத்தை தற்போது அல்டிமேட் ஸ்டார், அஜித் தட்டிச்சென்றுள்ளார்.

முதலிடம் அஜித்திற்கு
தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜீத் தங்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளனர். இதன்மூலம், பிடித்த நடிகர்கள் பட்டியலில் அஜீத் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்.

ரஜினிக்கு 2வது இடம்
2வது இடத்தை ரஜினிகாந்த் பிடித்துள்ளார். ஆனால், அஜீத்-ரஜினி நடுவே நல்ல போட்டி இருந்துள்ளது கருத்துக்கணிப்பில் இருந்து தெரியவருகிறது. ஏனெனில், 15.9 சதம் பேர் ரஜினியை தங்களுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளனர். இது அஜீத்தைவிட 0.1 சதவீதம் மட்டுமே குறைவாகும்.

விஜய்க்கு 3வது இடம்
அஜீத்துக்கு போட்டியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளைய தளபதி, விஜய்க்கு இக்கருத்துக்கணிப்பில் 3வது இடம்தான் கிடைத்துள்ளது. விஜய் பிடிக்கும் என்று 9.2 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கமல், சூர்யா
உலக நாயகன் கமலஹாசன் தங்களுக்கு பிடித்த நடிகர் என்று, 5.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக சூர்யாவுக்கு 4.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications