அஜித் குமார் கேசில்.. நாளை மறுநாள் நடக்க போகும் முக்கிய சம்பவம்.. சாட்சிகளுக்கு போன முக்கிய மெசேஜ்
திருப்புவனம்: அஜித் குமார் வழக்கில் சாட்சிகள் நேரடியாக வந்து சாட்சியம் அளிக்கலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கில், அவருடைய நண்பர் சத்தீஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தாக்கியதை மறைந்திருந்து வீடியோ எடுத்த வீடியோ காரணமாக அவருக்கு மிரட்டல் வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில்தான், அஜித் குமார் வழக்கில் சாட்சிகள் நேரடியாக வந்து சாட்சியம் அளிக்கலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை தொடர்பான விவரம் தெரிந்தவர்கள், சாட்சிகள் நேரடியாக வந்து நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம்.
நாளை மறுநாள் (ஜூலை 6) வரை நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்துகிறார் என்று அஜித் தரப்பு வழக்கறிஞர் கணேஷ் பேட்டி அளித்துள்ளார். அஜித் குமார் வழக்கு தொடர்பாக, கடந்த வாரம் கோர்ட் விசாரணை நடத்தியது. அதில் திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜர் ஆகி வாக்குமூலம் கொடுத்தனர். அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார்.
இதில் நீதிபதிகள் தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதில், அஜித் குமார் கொலை வழக்கை உணர்வுப் பூர்வமாக எடுத்து, சிபிசிஐடியின் சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். காரணமான உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை. அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பு, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம். வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது . கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது என்று நீதிபதிகள் விமர்சனம் வைத்தனர்.
வழக்கு பின்னணி
சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கினை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது












Click it and Unblock the Notifications