ஷ்ஷப்பா...மீண்டும் ட்விட்டரில் மல்லுக்கட்டும் தல, தளபதி ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மீண்டும் தங்கள் சண்டையை துவங்கிவிட்டனர்.

அஜீத்தும், விஜய்யும் என்ன தான் நண்பர்களாகிவிட்டாலும் அவர்களின் ரசிகர்கள் மட்டும் நண்பேன்டா ஆகத் தயாராக இல்லை. அவர்களின் ரசிகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் அவ்வப்போது மோதிக் கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

இப்படி சண்டை போடாதீர்கள் என்று விஜய்யும், அஜீத்தும் கூறியும் ரசிகர்கள் அதை காதில் வாங்குவதாக இல்லை. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் ட்விட்டரில் சண்டையை துவங்கிவிட்டனர்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் தங்கள் இளைய தளபதி மீது கொண்டுள்ள பாசத்தால் #JILLA_KATHTHIBlockbusterYearOfVIJAY என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் ஆக விட்டுள்ளனர்.

தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ட்வீட் செய்ய மறுபக்கம் அஜீத் ரசிகர்களோ #VEERAMTheRealWinnerInEveryJilla என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாகவிட்டுள்ளனர். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் இந்தியா அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தளபதி

தளபதி

இன்டஸ்ரில தளபதி தான் ஃபர்ஸ்ட், ட்விட்டர்ல தளபதியன்ஸ் தான் ஃபர்ஸ்ட் #JILLA_KATHTHIBlockbusterYearOfVIJAY என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

கத்தி

கத்தி

பல புது படங்கள் ரிலீஸாகியும் எஸ்கேப்பில் இன்னும் கத்தி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மையான பிளாக்பஸ்டர் #JILLA_KATHTHIBlockbusterYearOfVIJAY என விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தல

தல

அஜீத்தியன்ஸ் தான் எப்பொழுதுமே மாஸ். அவர்கள் டிரெண்டாகத் துவங்கினார். ஆனால் நாம் தான் அவர்களை முடிக்கப் போகிறோம் #VEERAMTheRealWinnerInEveryJilla என அஜீத் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பிறவி கலைஞன்

பிறவி கலைஞன்

#VEERAMTheRealWinnerInEveryJilla தல பலவகையான கதாபாத்திரங்கள் மற்றும் மேக் ஓவர்களில் நடித்துள்ளதை இது காண்பிக்கிறது பிறவி கலைஞன் என ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

திட்டு

திட்டு

அஜீத், விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் வசைபாடுவதுடன் தல, தளபதியையும் கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் சண்டை எப்பொழுது தான் ஓயுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+