ஜல்லிக்கட்டு.. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை நேரில் அழைக்க அலங்காநல்லூர் குழு கிளம்பியது
ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க வருமாறு கூறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்க அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினர் சென்னை வருகின்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க வருமாறு கோரி முதல்வர் .ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்க அலங்காநல்லூர் விழாக் கமிட்டி சார்பில் ஒரு குழு சென்னைக்கு கிளம்பியுள்ளது.
தனியாக ஒரு மினி பஸ் அமர்த்தி அதில் 20 பேர் கொண்ட குழுவினர் சென்னை கிளம்பிச் சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் சுந்தர் தலைமையில் இவர்கள் செல்கிறார்கள்.

முன்னதாக பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென தள்ளி வைத்து விட்டனர். தள்ளி வைத்த கையோடு அலங்காநல்லூர் கமிட்டியினர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். அங்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது விழாக் கமிட்டியினர் அழைப்பிதழோடு சென்னைக்குக் கிளம்பியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க வருமாறு முதல்வரையும் சசிகலாவையும் இவர்கள் அழைக்கவுள்ளனர். இதில் யார் போட்டியைத் தொடங்கி வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வரா அல்லது சசிகலாவா என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
முதல்வர் தொடங்கி வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவசரச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கொண்டு வர பாடுபட்டவர் என்ற அடிப்படையில் அவர் தொடங்கி வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சசிகலா தொடங்கி வைப்பதாக இருந்தால் என்ன தகுதியின் அடிப்படையில் அவர் தொடங்கி வைக்க முடியும் என்பது இந்த ஜல்லிக்கட்டுக்காக உயிரைக் கொடுத்து இரவும் பகலுமாக போராடி, கடைசியில் போலீஸாரின் தடியடிகளுக்கும் இரையாகிய அப்பாவி மாணவர்கள், இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications