ஆலங்குளம் தொகுதி: மனோஜ் பாண்டியன் வெற்றி பெறுவாரா? டஃப் கொடுக்கும் அதிமுக? எக்ஸிட் போல் முடிவு என்ன?
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இந்த முறையும் மனோஜ் பாண்டியன் வெற்றியை பெறுவாரா? அல்லது அதிமுக வெற்றியை கைப்பற்றுமா? அல்லது இந்த இரண்டும் நடக்காமல் தவெக ஆச்சர்யம் கொடுக்குமா? என்பது கணிக்க முடியாத நிலை இருப்பதாக அத்தொகுதி வாக்காளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
ஆலங்குளம் தொகுதியை பொறுத்தவரை 2,53,408 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,23,739 ஆண்கள், 1,29,650 பெண்கள் மற்றும் 19 திருநங்கைகள் உள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட தற்போது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் 83.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?
திமுக சார்பில் பால் மனோஜ் பாண்டியன், அதிமுக சார்பில் கேர் ஆ பி பிரபாகரன், தவெக சார்பில் விபின் சக்கரவர்த்தி, நாதக சார்பில் பால்ராஜ் வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு 37 ஆயிரம் வாக்குகள் வாங்கிய ஹரி நாடார் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஆலங்குளம் தொகுதியில் 4 முனை போட்டியே ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை திமுக சார்பில் களம் இறங்கியுள்ளார். இதனால் எளிதில் வெற்றி பெறுவாரா என்றால் அது சற்று கடினம் என்றே தெரியவந்துள்ளது. யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத நிலை இருப்பதாக அத்தொகுதி வாக்காளர்கள் கூறும் கருத்தாக உள்ளது. குறிப்பாக கேர்பி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் இடையே கடும் போட்டி நிலவுவதையும் பார்க்க முடிகின்றது.
திமுக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி
பீடி சுற்றும் தொழில், விவசாயம், செங்கல் சூளை போன்ற தொழில்கள் அதிகம் நடக்கும் தொகுதியான ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சில கருத்துக்கணிப்பு நிறுவனங்களும், கே ஆர்பி பிரபாகரன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளன. விஜய்யின் தவெக மற்றும் திமுக கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும் என மின்னம்பலமும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளது.
மாலைமலர் கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி - 34.78 சதவீதம்
அதிமுக கூட்டணி - 26.09 சதவீதம்
தவெக - 13.04 சதவீதம்
நாதக - 21.74 சதவீதம்
மற்றவை - 4.35 சதவீதம்
தந்தி டிவி கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி - 34 - 40 சதவீதம்
அதிமுக கூட்டணி - 37 - 43 சதவீதம்
தவெக - 9 - 15 சதவீதம்
நாதக - 6 - 12 சதவீதம்
மற்றவை - 1 - 5 சதவீதம்
மின்னம்பலம் கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி - 31 சதவீதம்
அதிமுக கூட்டணி - 30 சதவீதம்
தவெக - 31 சதவீதம்
நாதக - 8 சதவீதம்
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications