ஆர்.கே. நகரில் மோதும் கோடீஸ்வர வேட்பாளர்கள் - டிடிவி தினகரன், மதுசூதனன், தீபா
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்களும், லட்சாதிபதி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனும், அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனும் கோடீஸ்வர வேட்பாளர்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. தொகுதியில் மொத்தம் 127 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று மட்டும் 72 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் இரு அணி வேட்பாளர்களான டிடிவி தினகரன், மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களுடைய சொத்து விபரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

டிடிவி தினகரன்
தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் அளவுக்கு அசையும் சொத்துக்களும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஃபெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார்.

மதுசூதனன்
மதுசூதனன் தனது பிரமாணப் பத்திரத்தில் 18 லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில், 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 3 கோடியே 30 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தன்மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தீபா சொத்துக்கள்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு ரு.1 கோடி அளவிற்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், 2 கோடி அளவிற்கு அசையாத சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவரின் பெயரை அவர் ஏனோ குறிப்பிடவில்லையாம்.

மருதுகணேஷ் சொத்து மதிப்பு
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, திமுக வேட்பாளர் மருது கணேஷின் சொத்து மதிப்பு ரூ.2,79,531 ஆகவும், அவருடைய மனைவியின் சொத்து மதிப்பு ரூ.7,08,606 ஆகவும் உள்ளது.

மதிவாணன் - லோகநாதன்
தேமுதிக சார்பில் போட்டிடும் வேட்பாளர் மதிவாணன் சொத்து மதிப்பு ரூ.40.69 லட்சமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனின் சொத்து மதிப்பு ரூ.6.5 லட்சமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications