திமுக- தேமுதிக கூட்டணி தான் தமிழகத்தை காப்பாற்றும்: கருணாநிதி
சென்னை: இப்போது உள்ள சூழ்நிலையில் கூட்டணியின் வெற்றி தான் தமிழகத்தைக் காப்பாற்றும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஆலோசிப்பதற்காக நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் தலைமையில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் குழுவில் திமுக பிரதிநிதிகளாக கனிமொழியும், திருச்சி சிவாவும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் கருணாநிதி. அப்போது, ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் உங்களைச் சந்தித்ததை, கூட்டணிக்கான ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கருணாநிதி, ‘அது ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதைப் பொறுத்தது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இப்போதே அதுபற்றி முன் கூட்டியே எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் இப்போது தமிழ்நாடு உள்ள நிலையில் கூட்டணி தேவை என்பதையும், அந்தக் கூட்டணியின் வெற்றி ஒன்று தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும் என்பதையும் தான் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன்' என்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘விஜயகாந்த் எடுத்த முயற்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ‘ஜனநாயகத்தில் தமிழ்நாட்டு மக்களை ஒன்று திரட்டுகின்ற முயற்சியை தம்பி விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அப்படிப் பாராட்டுவதற்கு அடையாளமாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகமும் அவருடைய முயற்சிக்கு எல்லாவகையான ஆதரவையும் தரத் தயாராக இருக்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்' என கருணாநிதி பதிலளித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications