எஸ்வி.சேகரை கைது செய்யவில்லையா? என கேட்கும்போதே யாரை கைது செய்கிறார்கள் பாருங்கள்! ஆளூர் ஷாநவாஸ்
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டி கைது செய்யப்பட்டதற்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டி கைது செய்யப்பட்டதற்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
500 ஏக்கர் வனப்பகுதி, ஆறுகள், 8 மலை பிரதேசங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூதாட்டி கைது
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் கண்டனம்
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யாரை கைது செய்கிறார்கள்?
அதில்"எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லையா? செய்யவில்லையா?" என்று நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. காவல்துறை யார் யாரை கைது செய்கிறது பாருங்கள்..
8 வழிச் சாலைக்காக விவசாய நிலத்தைப் பிடுங்கி, தம் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசை எதிர்த்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததற்காக மூதாட்டி கைது.
தேசவிரோதி
தேசியக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டே சட்டத்தை அவமதிக்கும் வகையில் சுற்றித் திரியும் சேகர் இங்கே தேசபக்தர் எனில், மண்ணைப் பாதுகாக்கப் போராடும் இந்த மூதாட்டி யார்? வழக்கம்போல் சமூக விரோதி தானே! இவ்வாறு ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடா?
இதேபோல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் மூதாட்டி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மூதாட்டி கைது போட்டோவை பதிவிட்டுள்ள ஸ்டாலின் ஜனநாயக நாடா ? போலீஸ் வேட்டைக் காடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications