மீண்டும் ஒரு ஆண் சிக்கலில் அல்போன்சா...!
சென்னை: நடிகை அல்போன்சா மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். முன்பு திருமணமே செய்து கொள்ளாமல் கணவர் போல தன்னுடன் வாழ்ந்து வந்த வினோத் குமார் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதால் அல்போன்சாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படியோ தப்பி வந்தார். இந்த நிலையில் இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்துக் கொண்ட புகாரில் சிக்கியுள்ளார் அல்போன்சா.
பாட்ஷா படத்தில் நடனக் கலைஞராக ஒரு பாட்டுக்கு ஆடி கவர்ந்தவர் அல்போன்சா. பூர்வீகம் கேரளா. இவரது தம்பி டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.
அல்போன்சாவுக்கு சொந்த வாழ்க்கை பிரகாசமாக அமையவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

வினோத்குமாருடன் குடித்தனம்
2 வருடங்களுக்கு முன்பு வினோத்குமார் என்பவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் தனது வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென வினோத் குமார், அல்போன்சா வீட்டு படுக்கை அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அல்போன்சா தற்கொலை முயற்சி
அல்போன்சாதான் கொன்று விட்டார் என்று பரபரப்பு கிளம்பியது. ஆனால் அல்போன்சா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் மேலும் பரபரப்பு கூடியது.

காரணம் நான் இல்லை
அதன் பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அல்போன்சா காப்பாற்றப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த விளக்கத்தில், தான் வினோத் குமாரின் மரணத்திற்குக் காரணம் இல்லை. படம் ஒன்றில் நடித்து வந்த வினோத் குமார், அந்தப் படம் வளராமல் நின்று போனதால் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

தகவல் இல்லை
இந்த வழக்கிலிருந்து இப்படியாக தப்பி மீண்டு வந்த அல்போன்சா குறித்து அதன் பிறகு தகவல் இல்லை. அவர் துபாய் போய் விட்டதாக இடையில் பேசப்பட்டது. இருப்பினும் அவர் குறித்த எந்த உருப்படியான தகவலும் இல்லை.

மீண்டும் ஒரு சிக்கல்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆண் சிக்கலில் மாட்டியுள்ளார் அல்போன்சா. இந்த முறை, அடுத்த பெண்ணின் கணவரை அபகரித்ததோடு அந்தப் பெண்ணையும் மிரட்டியதாக புகார் வந்துள்ளது.

சிக்கலுக்குக் காரணம் ஜெய்சங்கர்
சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ஜெய்சங்கர். இவர், அல்போன்சாவைத் திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இவரது பேஸ்புக் பக்கத்தில் அல்போன்சாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற, ஜோடியாக இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

மிரட்டுகிறார் அல்போன்சா
தனது கணவரை விட்டு விலக முடியாது என்று கூறும் அல்போன்சா தன்னை மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் தற்போது போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், புகார் மனு மீது சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அந்த விசாரணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்படும்.

வாக்குமூலம் பதிவு
புகார் கொடுத்த பெண்ணிடம் முதலில் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆதாரம் உண்மையா
நடிகை அல்போன்சாவும், அப்பெண்ணின் கணவரும் நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் மற்றும் வீடியோ படங்களை கொடுத்துள்ளார். அந்த படங்களின் உண்மை தன்மை பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்ச் ஆப் ஆன அல்போன்சா, ஜெய்சங்கர்
அப்பெண்ணின் கணவர் மற்றும் நடிகை அல்போன்சா ஆகியோரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும். அல்போன்சா பற்றி வெளிவந்துள்ள படங்களுக்கு கண்டிப்பாக அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications