ஒரு காசு கூட கொடுக்காமல் நான் பெற்ற 20,000 ஓட்டுக்களுக்கும் நன்றி.. ஆளூர் ஷாநவாஸ்
சென்னை: ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குக் கொடுக்காத எனக்கு 20,000 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன், நம்பிக்கையும் பெறுகிறேன் என்று குன்னம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார் வி்டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ். இத்தொகுதிக்குட்பட்ட அங்கனூர்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சொந்த ஊர் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படு தீவிரமாக வேலை பார்த்தனர், பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் ஷாநவாஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இதுதொடர்பாக ஷாநவாஸ் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:
வலிமை பெற்றவர்களுக்கும் வலிமையற்றவர்களுக்குமான போட்டியில், எளியவன் என்னையும் ஏற்றுக்கொண்டு சுமார் 20,000 பேர் வாக்களித்துள்ளனர். பணம் புரளும் சந்தையாக மாறிப்போயிருக்கும் தேர்தல் களத்தில், வாக்காளர்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட கொடுக்காத எனக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது, பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.
சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்க வேண்டும் என விரும்பி, வாக்களித்தவர்கள் - வாழ்த்தியவர்கள் - பிரார்த்தித்தவர்கள் - உடனிருந்து உழைத்தவர்கள் - பொருள் தந்து உதவியவர்கள் - ஆதரித்தவர்கள் - அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். மக்கள் மன்றத்தில் எப்போதும்போல் என் குரல் ஒலிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications