நீதியரசர் சந்துரு, முனைவர் வசந்தி தேவி, ஞாநிக்கு விருது- திருமாவளவன் அறிவிப்பு
சென்னை: அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு நீதியரசர் சந்துரு, முனைவர் வசந்தி தேவி, பத்திகையாளர் ஞாநி உட்பட 6 பேருக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகுதிவாய்ந்த சான்றோர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்ற பெயர்களில் 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 14 அன்றே நடந்திருக்க வேண்டிய இந்த விழா தமிழக சட்டசபைத் தேர்தல் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் ஜூன் 21 அன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது.
அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டான 2016ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோரின் விவரம் பின்வருமாறு:
அம்பேத்கர் சுடர் விருது நீதிபதி கே.சந்துருவுக்கும், பெரியார் ஒளி விருது முனைவர் வே.வசந்திதேவிக்கும், காமராசர் கதிர் விருது எல்.இளையபெருமாளுக்கும் (மறைவுக்குப் பின்), அயோத்திதாசர் ஆதவன் விருது பத்திரிகையாளர் ஞாநிக்கும், காயிதேமில்லத் பிறை விருது நாகூர் ஹனிஃபாவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ஒவ்வொன்றும் பட்டயமும், ரூ.50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் கொண்டதாகும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விசிக வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த முனைவர் வே.வசந்திதேவிக்கு ஆறுதலாக பெரியார் ஒளி விருது வழங்கப்போகிறார் திருமாவளவன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications