பிரபல கள்ளச்சாராய வியாபாரிக்கு 'பர்த் டே' கேக் ஊட்டிய எஸ்ஐ.. ஆயுதபடைக்கு மாற்றம்
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரியுடன் கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதபடைக்கு மாற்றாப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி விஜயக்குமார் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விஸ்வநாதன் என்பவர் பணியாற்றுகிறார். உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பவர் அஜித். இவருடைய தாய்மாமன் ஜானகிராமனும் கள்ளச்சாராய வியாபாரி கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளச்சாராய வழக்கில் கைது. செய்யப்பட்டு சிறைக்கு சென்றார் அஜீத். அதேபோல் அவருடைய மாமா ஜானகிராமனும் கடந்த மாதம் கள்ளசாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

இந்நிலையில் கடந்த 16.8.2020 கள்ளச்சாராய வியாபாரி அஜித் தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டு கேக் ஊட்டியும்,சால்வை அணிவித்து பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு உடனடியாக அந்த உதவி ஆய்வாளர் விஸ்வநாதனை திருப்பத்தூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு சாராய வியாபாரி பிறந்த நாளில் குற்றங்களை தடுக்க வேண்டிய காவல் உதவி ஆய்வாளர் கலந்து கொண்டது .அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சமூக விரோதிகளுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications