ஈஎம்ஐ கட்ட மாத மாதம் பணம்.. மூளையை கசக்கி பிழிந்த லாரி டிரைவர்.. பலே "கைரேகை"..ஆம்பூர் அரண்டுடுச்சு
திருப்பத்தூர்: நிதி நிறுவனத்தில் மாதத் தவணையில் வாங்கிய லாரிக்காக இ.எம்.ஐ., செலுத்த பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய ஆரணியைச் சேர்ந்த மாமன், மைத்துனரை ஆம்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், இரண்டு லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில், சமீபகாலமாகவே ஏராளமான திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களை கலக்கத்திற்கு ஆளாக்கி வருகிறது.. கடந்த 27ம் தேதியன்றும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

ஆம்பூர் போலீஸ்: ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனூர் எம்.எம். நகரில் பள்ளி ஆசிரியை சஞ்சலாமணி என்பவரது வீட்டில், மர்ம நபர்கள் புகுந்து, பீரோலிருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.. அதேபோல, கடந்த 13-ம் தேதி, ஆம்பூர் அருகே வெள்ளக்கல் என்ற கிராமத்தில் வசித்து வரும் சரோஜா என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், தங்கச்சங்கிலி, கம்மல், மோதிரம், மூக்குத்தி போன்ற நகைகளை திருடி சென்றுள்ளனர்.
ஆம்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இப்படி அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடக்கவும், ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்குகள் தொடர்பாகவே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில், தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
வாகன தணிக்கை: ஆனால், மர்மநபர்கள் யாருமே சிக்கவில்லை.. இது தொடர்பாக எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், மாராப்பட்டு கூட்டுச்சாலை சந்திப்பில் நேற்றைய தினம், ஆம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்..
அப்போது, டூவீலரில் 2 பேர் வந்தனர்.. அவர்களது பைக்கில் பதிவெண் இல்லை என்பதால், தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொல்லைமேடு என்ற பகுதியை சேர்ந்த தினகரன் (38), அக்ராபாளையம் குளத்துமேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (32) என்பது தெரியவந்தது...
திருட்டு சம்பவங்கள்: இவர்கள் 2 பேரும்தான், ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில், வீடு புகுந்து, நகைகளை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.. வீடுகளில் நடந்த மொத்த திருட்டுக்கும் தாங்கள்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர்.
இதுவரை, ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியிருக்கிறார்களாம்.. அவைகளை கொண்டுபோய் கடைகளில் விற்று, கிடைத்த பணத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் 2 லாரிகளை வாங்கியிருக்கிறார்கள்.. இதைத்தவிர, ரூ.50 ஆயிரத்துக்கு பைக் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, ரூ.22 லட்சம் வாகனங்கள், தங்க நகைகளை அவர்களிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
லாரி கிளீனர்: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "ஆரணியில் மணிவண்ணன் லாரியில் கிளீனராக வேலை செய்து வந்திருக்கிறார்.. அப்போதிருந்தே, சொந்தமாக லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்பது மணிவண்ணனின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்திருக்கிறது. அதனால், சில வருடங்களுக்கு முன்பு, நிதி நிறுவனம் மூலம் மாத தவணை முறையில், பழைய லாரி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
ஆனால், மாத தவணையை ஒழுங்காக மணிவண்ணனால் செலுத்த முடியவில்லை.. அதனால், நிதி நிறுவன ஊழியர்கள், லாரியை பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்கள்.. ஆசை ஆசையாக வாங்கிய லாரி பறிபோனதுமே இடிந்துபோனார் மணிவண்ணன்.. அத்துடன் கடன் தொல்லையும் கழுத்தை நெரித்துவிட்டது. அதனால், விரக்தியின் உச்சத்துக்கு போனவர், தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
தற்கொலை முடிவு: அப்போதுதான், தற்கொலை செய்து என்ன ஆகப்போகிறது? என்று யோசித்தவர் மனசு மாறி அந்த முடிவை கைவிட்டார்.. வேறு எங்காவது வேலைக்கு போகலாம் என்று முயற்சித்துள்ளார்.
ஆனால், எங்குமே அவருக்கு வேலை கிடைக்கவில்லை.. இதனால் வெறுப்படைந்த மணிவண்ணன், பூட்டிய வீடுகளில் திருட முடிவு செய்தார்.. திருடிய தங்க நகைகளை விற்றதில் அதிக பணம் கிடைக்கவும், மறுபடியும் லாரி பிசினஸ் ஆசை துளிர்த்துள்ளது. எப்படியாவது லாரி ஓனர் ஆகிவிடுவது என்று தன்னுடைய கால கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். எனவே, திருட்டு தொழிலில் கிடைத்த பணத்தை வைத்து மீண்டும் நிதி நிறுவனத்தில் மறுபடியும் கடன் வாங்கி லாரி வாங்கிவிட்டார்.
மணிவண்ணன்: ஆனால், இந்த லாரிக்கு மாதமாதம் இஎம்ஐ கட்ட வேண்டும் என்பதால், மறுபடியும் திருட ஆரம்பித்துள்ளார்.. இதனால் ஏகப்பட்ட பணம் மணிவண்ணனின் கையில் புரண்டிருக்கிறது..
மணிவண்ணனின் மைத்துனர் தினகரன் இதுகுறித்து கேட்டுள்ளார்.. எனவே, தினகரனிடம் மட்டும் உண்மையை சொல்லியிருக்கிறார் மணிவண்ணன். அப்போதுமுதல் மணிவண்ணனின் திருட்டு தொழிலுக்கு தினகரனும் கூட்டாளியானார்.. 2 பேருமே பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்துள்ளனர். இதனால் திருட்டு பணம் இரட்டிப்பாகிவிட்டது.. இப்போது இன்னொரு லாரியை வாங்கியுள்ளனர்.
மின் ஊழியர்கள்: மின் ஊழியர்கள் போல, 2 பேரும் காக்கி யூனிபார்ம்களை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு ஏரியாவிலும் நோட்டமிடுவார்களாம்.. பூட்டிய வீடுகளில், மின்சார கணக்கெடுப்பு நடத்துவதுபோல் சென்று மின் மீட்டருக்கு அருகில் வீட்டின் சாவியை எடுத்து வீட்டுக்குள் சென்று நகைகளை திருடிவிடுவார்களாம்..
ஆம்பூர் நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், அனைத்து வீடுகளிலும், பகல் நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.. அப்போது அந்தந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்களின் டூவீலர்கள் பதிவாகியிருந்தன..
ஒரே மாதிரி கைரேகை: பிறகு, திருட்டு நடந்த வீடுகளில், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தியதில், அனைத்து வீடுகளிலுமே ஒரே மாதிரியான கைரேகைகள் பதிவாகியிருந்தன.
இந்த கைரேகையானது, ஏற்கெனவே ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் திருட்டு வழக்கில் கைதான மணிவண்ணனின் கைரேகையுடன் ஒத்துப்போனது.. ஆக, சிசிடிவியில் பதிவான டூ வீலர், கைரேகைகள், ஒரே மாதிரியான திருட்டு, போன்றவைகளை வைத்துதான் போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.. இப்போது மணிவண்ணனையும், அவரது மச்சானையும் அலேக்காக தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்கள் ஆம்பூர் போலீசார்...!!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications