• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளபள பட்டு வேட்டி.. தக தக பட்டுச்சேலை.. அரோகரா.. திரும்பி பார்க்க வைத்த டக்ளஸ்

|

பழனி: பளபள பட்டுவேட்டி, தகதக பட்டுசேலை கட்டிக்கொண்டு, அரோகரா கோஷத்தை எழுப்பிய டக்ளஸ் பழனி முருகன் கோவிலில் இருந்தவர்கள் எல்லாரையுமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிப்பவர்தான் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள ஒரு யூனிவர்சிட்டியில் பேராசிரியர் என்பதால், சமஸ்கிருதம், இந்துத்துவம் பற்றி மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறார். அதனால் இவருக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. இதனால் டக்ளஸ் தன் பெயரை சுந்தரமூர்த்தி என்றே மாற்றி கொண்டார்.

இவரை போலவே அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். வருடம்தோறும் அமெரிக்காவிலிருந்து கிளம்பி அறுபடை வீடுகளுக்கும் வந்துவிட்டு போகிறார்கள்.

18 அமெரிக்கர்கள்

18 அமெரிக்கர்கள்

அப்படி சில நாட்களுக்கு முன்பு டக்ளஸ் தமிழ் ஆர்வம் கொண்ட 18 பேரை தன்னுடன் அழைத்துகொண்டு பழனிக்கு வந்தார். அப்படி வரும்போது இவர்கள் எல்லோருமே பட்டுவேட்டி, பட்டுசேலை என ஜொலித்ததுதான் இதில் ஹைலைட் சமாச்சாரமே.

பட்டுப்புடவை

பட்டுப்புடவை

கோயிலுக்குள் வெளீர் நிறத்தில் வித்தியாசமாக தெரிந்த இவர்கள் நெற்றியில் குங்குமமும், திருநீரும், சந்தனமும் கலந்து கூடுதல் மெருகை தந்தது. தழைய தழைய புடவையை நேர்த்தியாக கட்டிக் கொண்டு பெரிய பொட்டுக்களை வைத்திருந்தனர் பெண்கள்.

முருகனுக்கு அரோகரா

முருகனுக்கு அரோகரா

முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும்போது, இவர்கள் அனைவரும் "அரோகரா.. முருகனுக்கு அரோகரா கோஷம்" அங்கிருந்த நம் ஆட்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்தது. இதில் டக்ளஸ் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

அரோகரா சத்தம்

அரோகரா சத்தம்

முருகனுக்கு அரோகரா என்ற வார்த்தை அமெரிக்கர்களின் வாயில் நுழைந்து மழலை தமிழாக வெளிப்பட்ட அழகே தனிதான். பழனி மலை உச்சியில் வித்தியாசமாக கேட்ட அரோகரா சத்தம், அடுத்ததாக திருப்பரங்குன்றத்திலும் ஒலிக்க போகிறது...ஆம்.. அனைவரையும் கூட்டிக் கொண்டு டக்ளஸ் இப்போது அங்குதான் சென்றிருக்கிறார்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

திண்டுக்கல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
உதய குமார் எம் அஇஅதிமுக வென்றவர் 5,10,462 48% 1,27,845
காந்திராஜன் எஸ் திமுக தோற்றவர் 3,82,617 36% 0
2009
சித்தன் என் எஸ் வி காங்கிரஸ் வென்றவர் 3,61,545 44% 54,347
பாலசுப்ரமணி பி அஇஅதிமுக தோற்றவர் 3,07,198 37% 0
2004
சித்தன், என். எஸ். வி. காங்கிரஸ் வென்றவர் 4,07,116 59% 1,55,171
ஜெயராமன் எம் அஇஅதிமுக தோற்றவர் 2,51,945 37% 0
1999
ஸ்ரீனிவாசன், சி. அஇஅதிமுக வென்றவர் 2,94,794 44% 20,343
சந்திரசேகர், எஸ். திமுக தோற்றவர் 2,74,451 41% 0
1998
ஸ்ரீனிவாசன் சி. அஇஅதிமுக வென்றவர் 2,76,106 47% 15,199
சித்தன் என்.எஸ்.வி. டி எம் சி ( எம்) தோற்றவர் 2,60,907 44% 0
1996
சித்தன் .என்.எஸ்.வி டி எம் சி ( எம்) வென்றவர் 4,44,858 64% 2,67,914
ஸ்ரீநிவாசன் .சி அஇஅதிமுக தோற்றவர் 1,76,944 25% 0
1991
சி. ஸ்ரீனிவாசன் அஇஅதிமுக வென்றவர் 4,16,652 67% 2,24,417
கெ. மாயா தேவர் திமுக தோற்றவர் 1,92,235 31% 0
1989
சீனிவாசன், சி. அஇஅதிமுக வென்றவர் 4,34,966 67% 2,35,368
வரதராஜன், என் சிபிஎம் தோற்றவர் 1,99,598 31% 0
1984
கெ.ஆர். நடராஜன் அஇஅதிமுக வென்றவர் 3,43,571 62% 1,41,318
கெ. மாயா தேவர் திமுக தோற்றவர் 2,02,253 36% 0
1980
மாயா தேவர் கெ. திமுக வென்றவர் 2,44,669 52% 26,746
ராஜன் செல்லாப்பா வி. அஇஅதிமுக தோற்றவர் 2,17,923 46% 0
1977
மாயா தேவர் கெ. அஇஅதிமுக வென்றவர் 2,83,341 60% 1,69,224
பாலசுப்ரமணியம் எ சிபிஎம் தோற்றவர் 1,14,117 24% 0
1971
எம். ராஜாங்கம் திமுக வென்றவர் 2,48,638 60% 97,635
கெ. சேமாச்சாரம் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,51,003 36% 0

 
 
 
English summary
18 American Devottees worshipped Palani Murugan temple wearing with Silk Saree and Dhoties

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more