போதையிலிருந்த அமெரிக்க பெண் ஆட்டோ டிரைவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
காஞ்சிபுரம்: போதையில் இருந்த அமெரிக்க பெண் ஆட்டோ ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன் (35). இவருக்கும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இருவரும் வேளச்சேரியில் வீடு பார்த்து குடியேறினர். இந்நிலையில் விமலுக்கு வேலை போய்விட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விமல்
மேலும் கேலா எப்போதும் போதையில் இருப்பதாலும் அவ்வப்போது தகராறு எழுந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்துக்கு
இந்நிலையில் போதையில் அரைநிர்வாணத்தில் அங்கிருந்த மக்களிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூறியவாறு இருந்த கேலா குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மறைவான இடத்துக்கு
அங்கு போதையில் இருந்த கேலாவுக்கு போதை தெளிந்தவுடன் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனது கணவர் வெள்ளைகேட் பகுதியில் தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டவுடன் அங்கு போதையில் இருந்த கேலாவை ஆட்டோ டிரைவர்கள் சிலர் மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர்.

விசாரணை
இதையடுத்து அந்த பெண்ணை மீண்டும் வெள்ளைகேட் பகுதிக்கே அழைத்து சென்றுவிட்டுவிட்டனர். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பெண்ணின் வாக்குமூலத்தை அடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த 3 ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications