For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13ம் தேதி திருச்சி வருகிறார் அமித் ஷா... பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்!

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரும் 13ம் தேதி திருச்சி வருகிறார். இதையொட்டி மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் திருச்சியில் உள்ள தென்னூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜக அதிக முயற்சி செய்தது. கூட்டணிக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டுகொள்ளவில்லை.

Amit Shah to visit Trichy: Intelligence officials busy

பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கைகள் சிலவற்றை பாஜக ஏற்காததால் தான் தேமுதிக அந்த கூட்டணியில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனித்து போட்டியிட பாஜக வலுவாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் 13ம் தேதி திருச்சியில் உள்ள தென்னூரில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அமித் ஷா கலந்து கொள்கிறார். அவர் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

அமித் ஷாவின் வருகையையொட்டி மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கூட்டம் நடக்கும் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

English summary
State and centre intelligence officials checked the security arrangements in Trichy where BJP leader Amit Shah is addressing a gathering on april 13th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X