தீபாவளி, பொங்கல், எல்லா பண்டிகையும் இன்னைக்கு ஜெயா டிவியிலதான்!
பண்டிகை என்றாலே உற்சாகமும் கொண்டாட்டம்தான். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மேளதாளம் முழங்க அதிமுகவினர் உற்சாகத்துடன் குத்தாட்டம் போட்டனர். இந்த கொண்டாட்டங்களை ஜெயா தொலைக்காட்சியும், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டாடி வருகின்றன.

தீர்ப்பினால் மாறிய காட்சி
சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பு பற்றி காலை முதலே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் ஜெயாடிவியில் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

மக்கள் முதல்வர்
ஜெயா ப்ளஸ் டிவியில் மக்கள் முதல்வர் என்ற ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. எல்லாம் சில மணிநேரங்கள்தான்.

கொண்டாட்ட களம்
ஜெயலலிதா விடுதலை என்று காலை 11 மணிக்கு மணிக்கு தீர்ப்பு வெளியான உடன் ஜெயாடிவியில் நீதி வென்றது என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியிலும் அதிமுகவினர் கொண்டாட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இணையதள முகப்பில்
அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதள முகப்பும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. அம்மா திரும்ப வந்துவிட்டார். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்று என்ற வாசகம் இணைய முகப்பில் இடம்பெற்றுள்ளது.

இப்ப வாங்க பதில் சொல்றோம்
வெற்றிக்கொண்டாட்டத்திற்கு இடையே பேசிய நடிகை வினோதினி, தமிழ்நாட்டில் பேசியே ஏமாற்றிய தலைவர்களும், பேசத் தெரியாத தலைவர்களும் இப்ப வாங்க நாங்க பதில்சொல்றோம் என்று கூறினார். சதியை மிதி மிதி என்று மிதித்து எங்க அம்மா சிங்கம் மாதிரி வந்துட்டாங்க என்றார் வினோதினி.

பண்டிகை நாளோ?
தீபாவளி, தை திருநாள் என இரண்டு பண்டிகைகளும் ஒரே நாளில் வந்துவிட்டதோ என்று எண்ணும் வகையில் கொண்டாடிவருகின்றனர் அதிமுகவினர். இதனை ஜெயாதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்வதோடு அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் ஒளிபரப்பி வருகிறது.

படம் போச்சே
ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்புவதாக முன்னோட்டம் போட்டனர். உற்சாக கொண்டாட்டத்தை ஒளிபரப்பியதால் திரைப்படத்தை ஒளிபரப்பவில்லை ஜெயாடிவி இதனால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications