பிரதமர் பதவிக்கு அம்மாவை தவிர யாரும் சரிபட்டு வரமாட்டாங்க: சிங்கமுத்து
ஈரோடு: முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான், பிரதமர் பதவிக்கு சரிபட்டு வருவாங்க என்று நடிகர் சிங்கமுத்து பேசினார்.
ஈரோடு பகுதியில் நடிகர்கள் சிங்கமுத்து, செந்தில் ஆகியோர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது நடிகர் சிங்கமுத்து பேசும் போது சினிமா வசனத்தை உதாரணம் கூறி பேசினார்.
நான் ஒரு படத்துல வடிவேலுவை பார்த்து; ‘‘அதற்கு இவன் சரிபட்டு வரமாட்டான்'' என்று பேசுவேன். அதேபோல் தமிழ்நாட்டில் இப்போது தி.மு.க. சரிபட்டு வராது. காங்கிரஸ் சரிபட்டு வராது. விஜயகாந்த் உள்பட யாரும் தமிழ்நாட்டில் சரிபட்டு வரமாட்டாங்க. நம்ம முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான், அதற்கு சரிபட்டு வருவாங்க என்றார்.

மின் மிகை மாநிலம்
மக்கள் அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட தயாராக இருக்காங்க. முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. வால் தமிழ்நாடு இருண்டு கிடந்தது. எந்த மின்திட்டமும் நிறைவேற்றவில்லை. இப்போம் அ.தி.மு.க. மீது பழி போடுறாங்க.

ஜெ.பிரதமராகவேண்டும்
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தான் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவும் இப்படி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் நம்ம முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும். அதற்கு எல்லோரும் இரட்டை இலைக்கு ஓட்டு போடணும் என்றார்.

டொனேசன் வாங்கும் விஜயகாந்த்
நடிகர் செந்தில் பேசும் போது,‘‘ ஊழலை ஒழிப் போம்னு விஜயகாந்த் சொல்கிறார். ஆனால் அவர் காலேஜிலே டொனேஷன் வாங்குகிறார். அவர் ஊழலை பற்றி எப்படி பேசலாம்?
புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினார்கள். ஆனால் கருணாநிதி எந்த கஷ்டமும் படவில்லை. மக்களை ஏமாற்றியே வளர்ந்தார். இன்னும் மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்'' என்று கூறினார்.

நடிகை பபிதா பிரச்சாரம்
மக்கள் ஆட்சி அமையவும், ஜெயலலிதா முதல்வராகவும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டோமோ அதுபோல் பொதுமக்கள் தற்போது ஒற்றுமையுடன் இருந்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும், ஜெயலலிதா பிரதமர் ஆக்கப்பட வேண்டும் என்று நடிகை பபிதா பேசினார்.

விஜயகாந்த் கஞ்சத்தனம்
கருப்பு எம்.ஜி.ஆர். என கூறிக்கொள்ளும் விஜயகாந்த் எச்சில் கையால் கூட காக்கை ஓட்டமாட்டார். விஜயகாந்த் பேசும் போது எதிர்கட்சி கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள், எனக்கு ஓட்டு போடுங்கள் என கூறி மக்களை ஊழலுக்கு அழைத்துச்செல்கிறார் என்றார் பபிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications