16 பொருட்கள் நிரம்பிய அம்மா குழந்தைகள் நல பெட்டகம்.. "பச்சை" சூட்கேஸில் வைத்து வழங்கிய அமைச்சர்கள்
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடந்தது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொண்டு வழங்கினர்.
பச்சை நிற சூட்கேஸில் இந்தப் பொருட்களை வைத்து பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னையில்
சென்னையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பாலகங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த சூட்கேஸை இளம் தாய்மார்களுக்கு வழங்கினர்.

செய்யாறு
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிறப்பு அழைப்பாளாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிரசவித்த தாய்மார்களுக்கு பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, கொசுவலை, குளியில் சோப்பு, கைகழுவும் திரவம் உள்பட 16 வகையான பொருடகள் அடங்கிய குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

ஆரணியில்
ஆரணி அரசு மருத்துவமனையில் நகராட்சித் தலைவி ஆனந்தகுமாரி தொடங்கி வைத்தார். மருத்துவமனை அதிகாரி கவிதா, டாக்டர்கள் சுதா, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்
அரியலூரில் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி மற்றும் அரியலூர் சட்டசபை உறுப்பினர் துரை.மணிவேல் முன்னிலை வகித்தனர்.

என்னென்ன உள்ளது
இப்பெட்டகத்தில், குழந்தைகளுக்கான நகவெட்டி, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை எண்ணெய், பொம்மை மற்றும் கிலுகிடுப்பை, கைகழுவும் திரவம், துண்டு, குழந்தை நாப்கின், குழந்தை கொசுவலை, குழந்தை சாம்பு, சௌபாக்ய சுண்டி லேகியம் மற்றும் பொருட்கள் வைக்கும் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்.












Click it and Unblock the Notifications