மாற்றம்... முன்னேற்றம்... நெற்றியிலிருந்து தோள்பட்டைக்கு இறங்கிய ஸ்டிக்கர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதம் கொட்டித் தீர்த்த மழையால், சென்னையைப் போலவே ‘அம்மா' ஸ்டிக்கரும் தேசிய அளவில் பிரபலமானது.

வெள்ள நிவாரணமாக எங்கெங்கிருந்தோ வந்த பொருட்களில் எல்லாம், அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது.

அதில் இருந்து ஸ்டிக்கர் பாய்ஸ் தீயாக வேலை செய்ய ஆரம்பித்தனர். நெட்டிசன்களும் சளைக்காமல் எங்கெல்லாம் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது என கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் இடம் பெற்றிருந்தது கண்டு மக்கள் ஆடித்தான் போனார்கள். இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் விவாவதத்திற்கு ஆளானது.

அதனைத் தொடர்ந்து சற்று உஷாரான ஸ்டிக்கர் பாய்ஸ், இம்முறை நடத்தப்பட்ட இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெற்றிக்குப் பதிலாக அவர்களது மாலையில் ஜெயலலிதா படத்தை ஒட்டியுள்ளனர்.

ஆனபோதும், அதனையும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+