ஜெ.வுக்கு பிறந்த மகள் நான்தான்.. டிஎன்ஏ சோதனை கோரி ஹைகோர்ட்டில் நாளை அம்ருத்தா மனுத்தாக்கல்!
ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் எனக்கூறி அம்ருத்தா நாளை சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் எனக்கூறி அம்ருத்தா நாளை சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் என உச்சநீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த அம்ருத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதற்கான டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் தங்கள் குடும்ப வழக்கப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவித்தவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய அம்ருத்தா பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

ஜெ.வுக்கு பெண்குழந்தை பிறந்தது
போதாகுறைக்கு ஜெயலலிதாவின் உறவினரான லலிதாவும் நாள்தோறும் ஒரு புதிய தகவலை வெளியிட்டு பூகம்பத்தை கிளப்பி வருகிறார். ஜெயலலிதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது என்றும் அவருக்கு தனது பெரியம்மாதான் பிரசவம் பார்த்தார் என்றும் கூறினார்.

சோபன் பாபுதான் அப்பா
மேலும் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தபோது சோபன் பாபுதான் உடன் இருந்தார் என்றும் அந்த பெண் குழந்தைக்கு சோபன் பாபுதான் அப்பா என்றும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோரிக்கை விடுத்தார் அம்ருத்தா
ஆனால் அந்த பெண்குழந்தைதான் அம்ருத்தாவா என தெரியவில்லை என்றும் லலிதா கூறினார். இந்நிலையில் தன்னைப்பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என ஜெயலலிதா உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் அம்ருத்தா.

உயர்நீதிமன்றத்தில் மனு
இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அவர் மனுத்தாக்கல் செய்யவுள்ளார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அம்ருத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications