தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..
தூத்துக்குடி: சேலம் ஒமலூர் பொறியியல் பட்டதாரி, .கோகுல்ராஜ் கொலை வழக்கில் 6 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு குற்றவாளியான குமார், 37 என்பவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கு குறித்து தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், சிலரால் கடத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும், கடந்த 23-ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு சக வகுப்பு தோழியுடன் சென்றபோது, ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள் சுற்றி திரிந்தால், அவர் களின் சமூகம் குறித்து யுவராஜ் விசாரிப்பதும், வெவ்வேறு சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்தால், அவர்களை எச்சரித்து மிரட் டுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடந்த 23-ம் தேதி கோயி லுக்கு தோழியுடன் சென்ற கோகுல்ராஜிடம், சமூகம் குறித்து விசாரித்த யுவராஜ் உள்ளிட்ட கும்பல், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அறிந்து, மாணவரை மட்டும் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது.
இதனிடையே கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்த நிலையில், உறவினர்கள் நேற்று முன் தினம் மாலை உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்று உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். அசம்பாவிதங்களைத் தடுக்க, சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
கோகுல்ராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் அமைப் பின் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத் துவமனையில் திரண்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இருந்து 500 போலீஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனை யில் இருந்து நேற்று மதியம் கோகுல்ராஜ் உடலை ஊர்வலமாக உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை அமைப்பினர் ஓமலூர் பெரமெச்சூர் இடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். வழியில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க ஊர்வலத்தின் முன்பும், பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் கோகுல்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் 6 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு குற்றவாளியான குமார், 37 என்பவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை வரும் 7-ம் தேதி திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து குமார் சிறையிலடைக்கப்பட்டார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications