கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் பழனி சாலையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவி அதிகாலையில் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திண்டுக்கல் : பழனி சாலையில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரியின் மாணவி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள PSNA தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார் மாணவி தாரணி. இவர் இன்று அதிகாலையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தாரணி படுகாயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதறிய மகள்
இந்நிலையில் மாணவி தாரணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார். "நேற்று இரவு எங்களுக்கு போன் செய்து விடுதி நிர்வாகத்தினர் கொடுமைபடுத்துவதாகச் சொன்னாள், காலையில் வந்து அழைத்து செல்வதாகக் கூறினோம். என்னுடைய மகள் மன உளைச்சலில் இருக்கிறாள் என்று அவளை பார்த்து கொள்ளச் சொல்லுமாறு கல்லூரி நிர்வாகத்தினர், விடுதி காப்பாளர்களுக்கு போன் செய்தோம்.

உண்மை வெளி வரவேண்டும்
ஆனால் ஒருவர் கூட போனை எடுக்கவேயில்லை, என் மகள் போல வேறு யாரும் பாதிக்கக் கூடாது. கல்லூரியில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும், என்னுடைய பிள்ளை செப்புச் சிலை போல இருப்பாள் அவளை என்ன கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினார்களோ தெரியவில்லையே.

தகராறு
வார்டனுக்கும் தனக்கும் தகராறு இருப்பதாக தாரணி சொன்னாள். என்னுடைய மகள் கடுமையாக நடந்து கொள்பவள், யாராவது குறை சொன்னால் தாங்கிக்கொள்ள மாட்டாள்.

நிர்வாகம் மறைக்கிறது
என்னுடைய மகள் விழுந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஆனால் அவள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தான் உயிரிழந்தாள் என்று கல்லூரி நிர்வாகத்தினர் பொய் கூறுகிறார்கள்" என்றும் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications