வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்!
சென்னை: வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் நேற்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.

மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.
அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications