கரூரில் மக்களைச் சந்தித்து கொள்கைகளை விளக்கிய அன்புமணி
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று கரூரில் மக்களைச் சந்தித்து தனது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் வாக்குறுதி ஆகியவை அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கினார்.
சட்டசபைத் தேர்தலுக்காக பாமக சார்பில் அன்புமணி தீவிர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அவர் 7 நகரங்களில் 7 உரை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் அவர் உரை நிகழ்த்துகிறார்.இந்த நிலையில் இன்று கரூர் வந்த அவர் காலையில் மக்களைச் சந்தித்து துண்டறிக்கைகளை விநியோகித்தார்.
கடைகள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று அவர் மக்களையும், வியாபாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
பெண்களிடம் பேசுகையில் மது விலக்கு குறித்து விவரித்து பாமக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே பூரண மது விலக்கு குறித்த கோப்புதான் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதுகுறித்து அன்புமணி கூறுகையில், இன்று 13.03.2016 காலை கரூர் நகரில் பொதுமக்களை சந்தித்து பா.ம.க. கொள்கை மற்றும் வாக்குறுதி துண்டறிக்கைகளை வழங்கினேன். பல்வேறு தரப்பட்ட மக்களிடமும் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து அவர் விளக்கினேன்.
அதைக் கேட்ட மக்கள் தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் எனது முயற்சிக்கு துணை நிற்பதாக வாக்குறுதி அளித்தனர் என்று கூறியுள்ளார் அன்புமணி.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications