For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக மருத்துவ முகாம்: மக்களை பரிசோதித்து மருந்து வழங்கிய அன்புமணி ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பாமக நடத்தும் மருத்துவ முகாம்களில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களை பரிசோதனை செய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை மீட்க தர்மபுரியில் இருந்து 10 பரிசல்களை வரவழைத்து உதவினார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ். மேலும் படகில் சென்று மக்களுக்கு உணவு வழங்கினார். நேற்று கடலூருக்கு சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை துவக்கி வைத்த அன்புமணி மக்களை பரிசோதனை செய்து மருந்து வழங்கினார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அரும்பாக்கம்

சென்னை அரும்பாக்கம் Skywalk எதிரில், இன்று PMK மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பரிசோதனை செய்த போது
#ChennaiFloods

வேளச்சேரி

சென்னை வேளச்சேரி விஜயநகரில் மருத்துவ முகாமினை தொடங்கிவைத்து, மருத்துபரிசோதனை செய்தபோது

#ChennaiFloods
#ChennaiRains

சிஐடி நகர்

சென்னை சிஐடி நகரில், இன்று பா.ம.க மருத்துவ முகாமினை தொடங்கி மருத்துவபரிசோதனை செய்தபோது

#ChennaiFloods
#ChennaiRains

தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில், இன்று பா.ம.க மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த போது

#ChennaiFloods
#ChennaiRains

English summary
PMK youth wing chief Dr. Anbumani Ramadoss kickstarted free medical camps for people of Chennai on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X