யார் சிறந்த அறிவாளி- நாளைக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயார்- அன்புமணி
யார் சிறந்த அறிவாளி என்பதை நாளைக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக அன்பு மணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: யார் சிறந்த அறிவாளி என்பதை வரும் 29-ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக அன்புமணி தமிழிசைக்கு பதில் அளித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவினர் நடத்தப்பட்ட போராட்டத்தை தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இதற்கு பாமகவினர் கண்டனம் தெரிவித்து சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாகவும் ரயில்வே திட்டங்களையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக தமிழிசை மற்றும் அன்புமணிக்கு இடையே டுவிட்டரில் பெரும் தகராறு நடைபெற்றது.

உழைப்பு
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். அப்போது ராமதாஸை தான் தவறாக ஏதும் பேசவில்லை. அன்புமணியை போல் தான் தந்தை நிழலில் பதவியை பெற்றவள் அல்ல. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

தயாரா என சவால்
இவர் அமைச்சராக இருந்த போது நான் பார்வையாளராக இருந்தேன் என்கிறார். இவர் பதவியை எப்படி பெற்றார் என்பதை இந்த ஊரே அறியும். யார் அறிவாளி, யார் சிறந்த அரசியல்வாதி என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் அன்புமணி விவாதம் நடத்த தயாரா என்று கேட்டிருந்தார் தமிழிசை.

இழிவு
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இழிவுப்படுத்தி பேசி விட்டார்.

போராட்டம்
புனிதமான போராட்டத்தை கொச்சை படுத்திவிட்டதற்காக டாக்டர் தமிழிசை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாமக சார்பில் இன்று வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் டாக்டர் தமிழிசை சவுந்தராஜனை கண்டித்து தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 29 ம் தேதிக்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications