சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களுக்கே தர வேண்டும்... அன்புமணி அட்வைஸ்!
சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களிடமே கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர்: சசிகலா குடும்ப சொத்துகளை மீட்டு தமிழக மக்களிடமே கொடுக்க வேண்டும், ஏனெனில் அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்து என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது : சசிகலா குடும்பத்தை சார்ந்த 187 இடங்களில் கடந்த வாரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 1400 கோடி மதிப்பிலான பொருட்களும், சொத்துகளும் பிடிபட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சொத்து சேர்த்த சசிகலா குடும்பத்தில் மட்மே சோதனை நடந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பணம் சேகரித்துக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிட்மும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ஏனெனில் சசிகலாவோ, ஜெயலலிதாவோ நேரடியாக சொத்து சேர்க்கவில்லை, இவர்கள் மூலமாகத் தான் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.
27 ஆண்டுகாலமாக இவ்வளவு பெரிய அளவில் சொத்து சேர்த்திருக்கிறார்கள். இது உள்நாட்டில் மட்டும் தான் இன்னும் இவர்களுக்கு வெளிநாடுகளில் கணக்கில் அடங்கா சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். அரசு இந்த சொத்துகள் அனைத்தையும் தமிழக மக்களுக்கே மீண்டும் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது மக்களின் சொத்து, அவர்களை மிரட்டி பறித்து வாங்கப்பட்டது தான் இவை எனவே மக்களுக்கே அவற்றை திரும்ப அளிக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications