பாளையங்கோட்டை சிறையில் பாமக தொண்டர்களை சந்தித்த அன்புமணி! தைரியம் அளித்த வார்த்தைகள்!
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று காலை பாமக தொண்டர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
என்.எல்.சி.க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாமக தொண்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டத்தை பாமக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் தொண்டர்களை சந்திக்க அன்புமணி ராமதாஸ் பெயரில் சிறைத்துறைக்கு மனு கொடுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு விசிட் அடித்தார் அன்புமணி. அவரது வருகையை ஒட்டி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல் இன்று மதியம் மதுரை மத்திய சிறைக்கு செல்லும் அன்புமணி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாமக தொண்டர்களையும் சந்தித்து அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கவுள்ளார். இதனிடையே பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விவசாயிகளுக்கு துணை நிற்க தமிழக அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக நிற்பதாக விமர்சித்தார்.

மேலும், நெய்வேலியில் 3வது நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என வினவியுள்ளார். விவசாயிகளின் விளை நிலங்களை என்.எல்.சி. கையகப்படுத்தக் கூடாது என்பதும் உரிய இழப்பீடு தர வேண்டும் என்பதும் அன்புமணியின் கோரிக்கையாகும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications