ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை அணிந்து வைகையில் இறங்கும் கள்ளழகர்!
மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சூடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மதுரை: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் அணிந்துதான் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். இதற்காக ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை, கிரி, பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவதற்காக அழகர் மலையில் இருந்து திங்கட்கிழமை மாலை புறப்பட்டார் கள்ளழகர். வழியெங்கும் பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
ஆங்காங்கே மண்டகப்படிகளில் தங்கிய அழகர் இன்று காலையில் மதுரை வந்தார். அவரை பக்தர்கள் மூன்று மாவடி அருகே எதிர்கொண்டு வரவேற்றனர். பக்தர்களின் எதிர்சேவையை அன்போடு ஏற்றுக்கொண்டு அருள்பாலித்தார் கள்ளழகர். இன்று தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயத்தில் தங்குகிறார்
இரவு 12 மணிக்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்கிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கிளி பரிவட்டம் உள்ளிட்வைகளை உடுத்தி கொண்டு பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளிக்கிறார்.

கள்ளழகர்
ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி , பரிவட்டம் உள்ளிட்டவைகளை சாற்றி தான் கள்ளழர் ஆற்றில் இறங்குவது வழக்கம் இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.

மதுரை வந்த அழகர்
இந்த ஆண்டும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பெளர்ணமி தினமான 10.5.2017 புதன் அன்று நடைபெறுகிறது இந்நிகழ்ச்சிக்காக அழகர்கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வந்து விட்டார்.

ஆண்டாள் மாலை
ஆற்றில் அழகர் இறங்கும் போது அவர் அணியவிருக்கும் மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டச் சென்றது
திங்கட்கிழமை காலையில் இருந்தே ஸ்ரீஆண்டாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. திருக்கோவில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்று வந்து மாலை நிறைவு பெற்றது.

சிறப்பு பூஜைகள்
ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருக்கோவிலின் சார்பில் ஸ்தானிகர் ரமேஷ் பெற்று கொண்டு நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று இரவு கார் முலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள டி.குண்ணத்தூரில் சில மணிநேரங்கள் ஆண்டாள் மாலை அடங்கிய பெட்டி இறக்கிவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஜனைகள் பாடப்பட்டன.

தங்கக் குதிரை வாகனத்தில்
மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் தல்லாக்குளம் பெருமாள் கோவில் வைத்து இன்றிரவு அழகருக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் அதனை தொடர்ந்து நாளை புதன் அன்று காலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கலைந்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகளை மட்டுமே அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது இதன் சிறப்பம்சமாகும்

திருவிழா கோலம் பூண்ட மதுரை
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். மதுரையே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications