திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற 10 தமிழர்கள் கைது: செம்மரம் கடத்தியதாக புகார்
தூத்துக்குடி: திருச்செந்தூரில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி கும்பிடச் 10 பேரை செமமரம் கடத்தியதாக கூறி ஆந்திர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல், முருகன், வேல்முருகன், உள்ளிட்ட 10 பேர் கடந்த 13ம் தேதி திருப்பதி கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். தஞ்சை பெரிய கோவில், திருவரங்கம், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலைக் கோயில்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடந்த 15ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர்களது கார் வழி தவறி சென்றுள்ளது. இதையடுத்து செம்மரம் கடத்த வந்ததாக கூறி, ஆந்திரா வனத்துறையினர் 10 பேரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 16 ம் தேதியன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது தான் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 பேரையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications