திமுக எதிர்பார்க்கும் தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்க முயலும் அழகிரி: கடும் நடவடிக்கை பாய வாய்ப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த தேமுதிகவுடனான கூட்டணி அமைக்க முடியாத வகையில் மு.க. அழகிரி கருத்து தெரிவித்ததால் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உட்பட திமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அழகிரி மீது நிச்சயம் கடும் நடவடிக்கைகள் பாயக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவுடனான உறவை தேமுதிக முறித்துக் கொண்டது முதலே அது எப்படியும் திமுகவுடன் கூட்டணி அமைத்துவிடும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்து வந்தது. இதற்கு ஏற்றார்போல தேமுதிக எம்.எல்.ஏக்கள் வரிசையாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போக திமுக பக்கம் தேமுதிக சாய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதன் முக்கிய திருப்பமாகத்தான் ராஜ்யசபா தேர்தல் வந்தது. அப்போதாவது திமுக- தேமுதிக உறவு ஏற்பட்டுவிடும் என்ற சூழல் உருவானது. ஆனால் அப்போதும் அது நடக்காமல் போனது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸை திமுக கழற்றிவிட்டது.

பெருநம்பிக்கையில்..
இப்படி காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட்டதற்கு காரணமே, தேமுதிக எப்படியும் கூட்டணி அமைத்துவிடும் என்ற பெருநம்பிக்கைதான். தேமுதிக என்னதான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பேசிக் கொண்டிருந்தாலும் மெது மெதுவாக திமுக பக்கம் சாய்ந்து கொண்டிருந்தது.

எஸ்றா, திருமாவளவன்
இதற்கு முத்தாய்ப்பாக தேமுதிகவின் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக அனுதாபியான எஸ்றா சற்குணம் கலந்து கொண்டு கூட்டணி தொடர்பாக முதலில் பேசினார். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

ஒன் இந்தியா பேட்டியில்..
நமது இணையதளத்துக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் கூட, தேமுதிக- திமுக தரப்பில் சரிவர புரிதல் இல்லாத சூழலே இருதரப்பு இணக்கமின்மைக்கு காரணம் என்று மென்மையாகவே கூறியிருந்தார்.

தேமுதிக வந்தால் மகிழ்ச்சி..
இந்த கருத்தின் அடிப்படையில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் கருணாநிதியும், திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஸ்டாலினும் வரவேற்பு
இதன் பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி.. தேமுதிக தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி திமுக மிகவும் நம்பிக்கையாக எப்படியும் தேமுதிக கூட்டணி அமைத்துவிடும் என்று காத்திருந்தது.

ஆப்பு வைத்த அழகிரி
இந்த சூழலில்தான் திமுக தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரி, விஜயகாந்தெல்லாம் ஒரு தலைவரா.. தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைத்தால் உருப்படாது என்று ஒரே போடாகப் போட்டார். இதனால் திமுகவை நோக்கி நகர்ந்த தேமுதிகவை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டார் மு.க. அழகிரி.

கருணாநிதி அறிக்கை
மு.க. அழகிரி வழக்கம் போல, கருணாநிதிதான் எனது தலைவர்.. அவரைத் தவிர வேறு யாரையும் ஏற்கமாட்டேன் என்று பேசியிருந்தால் கூட பிரச்சனை இருந்திருக்காது. வாழ்வா? சாவா என்ற லோக்சபா தேர்தலில் அமைய வேண்டிய வலுவான கூட்டணியை கெடுத்துவிட்டார் என்ற கோபத்தைத்தான் இன்று திமுக தலைவர் கருணாநிதி தமது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை?
வழக்கத்துக்கு மாறாக, கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அழகிரிக்கு திமுக தலைமை விளக்க நோட்டீஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது என்றே தெரிகிறது. "தேமுதிக கூட்டணி அமைவதை கெடுக்க முயற்சிக்கிறாரே.. வெண்ணெய் திரிந்து வரும்போது பானையை உடைத்துவிட்டாரே அழகிரி'' என்கிறார்கள் திமுகவினர் கவலையுடன்.

கட்சியை விட்டு வெளியேற்றம்?
இதனால் அழகிரி இனியும் அடங்காவிட்டால் அவர் கட்சியை விட்டுக் கூட நீக்கப்படலாம் என்கிறார்கள். ஆனால், அவரை கட்சியை விட்டு வெளியேற்றினால் அடுத்து அழகிரி எப்படி வியூகம் வகுப்பார்.. எப்படி புதிய குழப்பங்கள் உருவாகும் என்பதை அபறியாதவர் அல்ல கருணாநிதி.. அதனால் அழகிரி விவகாரத்தில் கடும் கோபம் இருந்தாலும் ஸ்டாலின் தரப்பு நெருக்கடி இருந்தாலும் மெதுமெதுவாகவே நடவடிக்கை பாயும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல்












Click it and Unblock the Notifications