அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு- கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Recommended Video

சென்னை: அரியலூரை சேர்ந்த அனிதா தனது மருத்துவ படிப்பு கனவு கலைந்து போன விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உயிர் பறிபோனதுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள்தான் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடைபெற்றது.

கிடைக்காமல் போன மருத்துவம்
இதனால் அனிதாவிற்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தனது கனவு கலைந்து போனதே என்ற விரக்தியில் இருந்த அனிதா, இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியாளர்கள் கடும் கோபம்
அனிதாவின் தற்கொலை பற்றி கருத்து கூறியுள்ள கல்வியாளர்கள், இதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு என்று கூறினர். கல்வியாளர் ரவீந்திரநாத், நீட் தேர்வை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தியவர். மருத்துவம் தவிர நிறைய கல்வி வாய்ப்புகள் உள்ளன. அதை முதலில் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மன உறுதி வேண்டும்
இத்தனை மதிப்பெண் எடுத்தும் மாணவி அனிதா மன உறுதி இல்லாமல் இருந்திருக்கிறார் என்பதுதான் சோகம். மருத்துவம் மட்டுமே கனவாக இல்லாமல், அதை விட மிகப்பெரிய படிப்புகள் இருக்கின்றன. ஐஏஎஸ் படிக்கலாம் என்று கூறினார். குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சிவசங்கரன், ஏழ்மை நிலையில் நன்றாக படித்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சிகரமானது என்று கூறியுள்ளார்.

கழுத்தறுத்த அரசுகள்
மாணவி அனிதா குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து மத்திய மாநில அரசுகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டனர். நீட் தேர்வு மட்டுமே முக்கியம் என்று கூறியது ஏன். அனிதாவின் மரணம் வேதனையளிக்கக் கூடியது. சட்டப்போராட்டம் நடத்தியும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். எனவே மாணவர்கள் மன உறுதியோடு இதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications