அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு ஜெ., அண்ணா பிறந்தநாள் வாழ்த்து மடல்
சென்னை: எதிர்வரும் தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட சூளுரை ஏற்போம் என்றும் உள்ளாட்சி தேர்தலிலும் 3 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற மிகவும் பொறுப்புடனும் கவனமுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த கையோடு திருவோண திருநாளான இன்று மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 91000 பேரை அதிமுகவில் இணைத்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு ராசியான செப்டம்பர் 14ம் தேதி புதன்கிழமை நாளான இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்றே கூறலாம்.

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், எதிர்வரும் தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட சூளுரை ஏற்போம். தேர்தலில் தீயசக்தியை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும்.
தமிழகத்தில் தனிமனித காட்டாட்சிகோ குடும்ப ஆட்சிக்கோ இடமில்லை. எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அரசு நிறைவேற்றி வருகிறது தமிழக மக்கள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
உள்ளாட்சி தேர்தலிலும் 3 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற மிகவும் பொறுப்புடனும் கவனமுடனும் பணியாற்ற வேண்டும். அப்போது தான் நமது வெற்றி முழுமை பெறும். தொண்டர்கள் அரசு நலப்பணிகளை வாக்காளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications