கருணாநிதி உடல்நலக்குறைவு: அண்ணா பல்கலை.க்கு இன்று விடுமுறையா? பதிவாளர் விளக்கம்!
அண்ணா பல்கலை.க்கு இன்று விடுமுறை என பரவிய தகவல் வதந்தி என்று பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலை.க்கு இன்று விடுமுறை என பரவிய தகவல் வதந்தி என்று பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நேற்று மாலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் கருணாநிதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பதிவாளர் மறுப்பு
ஆனால் இந்த செய்தி பொய் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், இன்று விடுமுறை என்று வெளியான தகவலை மறுத்துள்ளார்.

பதிவாளர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகம் அதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

போலியான தகவல்
இதுபோன்ற எந்த தகவலையும் அண்ணா பல்கலைக்கழம் வெளியிடவில்லை என்றும் இணையதளத்தில் வெளியான தகவல் போலி என்றும் பதிவாளர் கணேசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications