யாரு ஹுண்டன்பர்க்கா! பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்! அண்ணாமலை கடும் விமர்சனம்
திருப்பூர்: பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது போல் பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பனைவிதைகள் நடும் நி கழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுகவினருக்கு தேசியக் கொடி என்றாலே பிரச்சினைதான்.

தேசியக் கொடியை கொண்டு செல்வதால் என்ன சட்ட்ம ஒழுங்கு பிரச்சினை ஏற்படப் போகிறது. பைக் பேரணி நடத்த அனுமதி மறுக்கிறது. ஹுண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் பங்குச் சந்தை இறங்குவதை முன்கூட்டியே கணித்து செய்திகளை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறது.
ஒரு பங்கு விலை இறங்குவகை முன்கூட்டியே கணித்து அதை விற்று லாபம் பார்க்கிறது. உலகில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹுண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அதான குழுமம் மீது ஹுண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தலைவர் மாதபிக்கு பங்குகள் இருந்ததாக ஹுண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹுண்டன்பர்க் எனும் நிறுவனம் அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ள நிலையில் நாளை திங்கள்கிழமை அதானி நிறுவனத்தின் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டும் அவரது நிறுவன பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டன.
இந்த நிலையில் செபி தலைவர் மாதபி, ஹுண்டன்பர்க் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஹுண்டன்பர்க் அறிக்கையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை ஆதாரமற்றவை மற்றும் அதில் உள்ள தகவல்களை நாங்கள் மறுக்கிறோம். எங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், எந்தவித ஒளிவு மறைவும் இல்லை. எங்களின் எல்லா முதலீடுகளும் வெளிப்படையாகவே செய்திருக்கிறோம்.
எங்கள் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து விரைவில் விரிவான விளக்கம் வெளியிடுவோம் என்றார். இந்த நிலையில் அதானி குழுமம் வெளியட்டுள்ள அறிக்கையில் ஹுண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக செய்யப்பட்டவையாகும். இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.
இவை மதிப்பிழந்த குற்றச்சாட்டுகளின் மறுசுழற்சி. அந்த குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டு 2024 ஜனவரியில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஹுண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் இந்திய சட்டங்களை முற்றிலும் அவமதிக்கும் ஒரு அவநம்பிக்கையான நிறுவனத்தால் வீசப்பட்ட அவதூறுகள் என அதானி குழுமம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications