ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் தலைவர் பதவிக்கான ரேஸில் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முந்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் கனகசபாபதி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருக்கிறது. அதேபோல் மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கு கேடி ராகவன் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெறும் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் மிகப்பெரிய அரசியல் புயல் வீசியது. குறிப்பாக, கட்சியின் முன்னணி முகமாக இருந்த முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முழுமையாக வெளியேறினார்.

Annamalai

அண்ணாமலையின் இந்த அதிரடி விலகலால் தமிழக பாஜகவின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது. ஏனென்றால் பாஜகவுக்காக பணியாற்றி வந்த பலரும் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் இணைந்துள்ளனர். கரு நாகராஜன் போன்றோர் அண்ணாமலை பக்கம் சென்றதை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை. இதனால் தமிழக பாஜகவை மறுகட்டமைப்பு செய்ய டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதனால் தமிழக பாஜகவுக்கு புதிய தலைமையை நியமிக்க முடிவு செய்திருக்கிறது. அடுத்தகட்ட தலைமை யார் என்ற பலத்த கேள்வி எழுந்த நிலையில், புதிய மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளில் டெல்லி பாஜக மேலிடம் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளராக இருக்கும் ராம சீனிவாசன், புதிய மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் சித்தாந்தங்களை ஆழமாகப் பேசக்கூடியவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்பதால் டெல்லி மேலிடம் இவருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது. ராம சீனிவாசனைத் தவிர, மாநிலத் துணைத் தலைவர்களாக இருக்கும் நாராயணன் வெங்கடேசன் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோரின் பெயர்களும் இந்த உயர்மட்டப் பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தமிழக பாஜகவின் மிக முக்கியப் பொறுப்பான 'மாநில அமைப்புச் செயலாளர்' பதவிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகியான கே.டி.ராகவனை கொண்டு வர டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இவருக்கு இருக்கும் அனுபவம், தற்போதைய இக்கட்டான சூழலில் கட்சிக்கு உதவும் என மேலிடம் கருதுகிறது.

இதுதொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கும் சூழலில், எல்.முருகன் இணையமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன. அந்த இடத்திற்கு நயினார் நாகேந்திரன் நகர்த்தப்படலாம் என்றும் பாஜகவினர் பேசி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+