Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை.. தீர்வு காண ராமதாஸ் கோரிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு உரிய தீர்வை உடனே காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அதற்கான சுமூகமான தீர்வை உடனடியாக எட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ள பணியாளர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலையளிக்கிறது.

Annamalai Univ. financial crisis: Dr. Ramadoss demands permanent solution

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த பல்கலையாகவும், மிகப்பெரிய ஒருமைப் பல்கலைக்கழகமாகவும் திகழும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முந்தைய நிர்வாகத்தில் நடந்த பல குளறுபடிகளால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், ஊழியர்களும் பணி நீக்கப்படும் நிலை ஏற்பட்டதால், அதைத் தடுக்கும் நோக்குடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நான் தான் முதன் முதலில் யோசனை தெரிவித்தேன். அதன்படியே 2013ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தியதுடன், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இ.ஆ.ப. அதிகாரி சிவதாஸ் மீனாவை தனி அதிகாரியாகவும் நியமித்தது. அதன்மூலம் பல்கலைக்கழகப் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது; ஆனால், அது நடக்கவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரியதன் நோக்கம், அந்நிறுவனம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை அறிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்பது தான். ஆனால், தமிழக அரசு அந்தக் கடமையை நிறைவேற்றவில்லை. மாறாக, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் வைட்டமின் ஊசியை போட்டு அனுப்புவதைப் போல, பல்கலைக்கழகத்தில் நிலவிய முறைகேடுகள், நிதி நெருக்கடிகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தனி அதிகாரி மூலம் சில மாதங்கள் நிர்வாகத்தை கவனித்து, துணை வேந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுடன் தமிழக அரசு ஒதுங்கிவிட்டது. இது அண்ணாமலை பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், அதன் பணியாளர் நலனுக்கும் எந்த வகையிலும் பயனளிக்கவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பல்கலைக்கழகத்தின் மொத்த வருவாய் ரூ.350 கோடி ஆகும். சாதாரணமான பல்கலைக்கழகத்தை நிர்ணயிக்க இந்த நிதி போதுமானது ஆகும். ஆனால், பல்கலைக்கழகத்துக்கு தேவையானதைவிட இரு மடங்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதால், மாதத்திற்கு ரூ.62 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.744 கோடி தேவைப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.400 பற்றாக்குறை நிலவும் சூழலில், அதைக் குறைக்கவோ அல்லது பல்கலைக்கழக வருவாய் அரசின் நிதி உதவியை அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஆனால், பல்கலைக்கழகத்தின் தனி அதிகாரியாக இருந்த சிவதாஸ் மீனா மாநில அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற்று நிலைமையை சமாளித்தார். கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் பணியாளரை மற்ற அரசு கல்லூரிகளுக்கு அனுப்புவதன் மூலம் ஊதியச் சுமையை குறைக்கலாம் என்று தீர்மானித்த அவர், அதன்படி 300&க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை மற்ற அரசு கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். இத்தகைய சீர்திருத்தங்களை செய்து முடிப்பதற்கு முன் அவர் மாற்றப்பட்டதாலும், அவருக்கு பிறகு சீர்திருத்தங்கள் முடக்கப்பட்டதாலும் தான் பல்கலைக்கழகம் மீண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக இதுவரை 9 தவணை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. 6 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. அரசு தலையிடுவதன் மூலம் அக்டோபர் மாத ஊதியம் ஒரு சில நாட்களில் கிடைத்து விடலாம். ஆனால், பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி நிரந்தரமாக தீர்க்கப்பட்டால் தான் ஆசிரியர்களும், ஊழியர்களும் எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு தீர்வு காண முடியும். அதற்கான ஆக்கப்பூர்வமான உத்தி தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. பல்கலைக்கழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டிய துணைவேந்தரும், பதிவாளரும் அதை செய்யாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் பணியில் ஈடுபடுவது சரியல்ல.

பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையை 5456 ஆக உயர்த்த கொள்கை அளவில் ஒப்புக்கொண்ட தமிழக அரசு, அதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி நிதி உதவியை அதிகரித்தல், மீதமுள்ள பணியாளர்களை அவர்கள் விருப்பப்படி கலந்தாய்வு மூலம் பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்தல் ஆகியவற்றின் மூலம் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன், கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரித்து ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு வழங்கலாம்.

எனவே, இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும்; பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 9 தவணை அகவிலைப்படி உயர்வு, 6 ஆண்டு பதவி உயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+