தென்காசி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம்!
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி குறித்து கேள்விகள் எழுந்திருந்தன. இது தொடர்பான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். அதாவது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவடத்தில் கடும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications