திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Recommended Video

சென்னை : திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம் செய்யூர் அருகே மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்போட்டியின் காரணமாக நடந்த இக்கொலையில் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே சென்னையைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவான்மியூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கலியமூர்த்தி திடீரென காணாமல் போனார்.

காட்டிக் கொடுத்த செல்போன்
இதுகுறித்து அவரது மனைவி ஹேமா திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்

திடுக்கிடும் தகவல்கள்
செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய திருவான்மியூர் சிக்னல் பகுதியில் சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரித்தது போலீஸ். அதில் கார் ஒன்றில் கலியமூர்த்தி மர்ம நபர்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஏற்றப்படுவது பதிவாகி இருந்தது.

வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்
போலீசார் சந்தேகத்தின் பேரில் பேரில் கலியமூர்த்தியின் நண்பர்களான முத்து, மணிகண்டனிடம் உரிய முறையில் விசாரித்தது. அப்போதுதான் கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

உடலைத் தோண்டும் பணி
மேலும் பரமசிவம், செந்தில், தர்மா ஆகிய நண்பர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. கலியமூர்த்தி உடல் புதைக்கப்பட்ட செய்யூர் அருகில் உள்ள ஓதியூர் பகுதிக்கு கொலையாளிகளை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கலியமூர்த்தி உடல் மீட்கப்பட்டது. தலைமறைவான 3 பேரை தேடி வருகிறது போலீஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications