ஜெ. பேனரை பேனா கத்தியால் டார் டாராக கிழித்த டிராபிக் ராமசாமி மீது கேஸ் போடக் கோரி வழக்கு!
கரூர்: கரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்ற பேனரை சமூக சேவகர் "டிராபிக்" ராமசாமி கிழித்ததாகவும், அதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் மதுரை உயர்நீதின்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ‘' நான் அ.தி.மு.க வக்கீல். 2014 ஆகஸ்ட் 31 இல் கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அ.தி.மு.க.வினர் சார்பில் திருமண வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.

அதில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப் படம் இடம் பெற்றிருந்தது. சென்னையை சேர்ந்த "டிராபிக்" ராமசாமி மற்றும் மூன்று பேர் பேனா கத்தியால் ஜெயலலிதா படத்தை கிழித்தனர். பேனரை அகற்ற தமிழக அரசு இயந்திரம் உள்ளது.
கரூர் நகராட்சி அல்லது போலீசாரிடம் புகார் செய்திருக்க வேண்டுமே தவிர பேனரை கிழிக்க உரிமை இல்லை. அதுபோல் செய்ய அரசாங்கம் கோர்ட் அதிகாரம் அளிக்கவில்லை.
சென்னையில் சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா வீடருகே பேனர்களை மாநகராட்சி சார்பில் அகற்றினர். அப்போது பேனர்களை கத்தியால் கிழித்த ராமசாமி பேனரில் இருந்த ஜெயலலிதா படத்தை தன் காலணிகளால் மிதித்தார்.
அவர் நடுநிலையோடு நடந்ததில்லை. அதனால், "டிராபிக்" ராமசாமி மற்றும் மூன்று பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications