ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் நவீனா மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் செந்தில் என்ற இளைஞரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா (18). விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (28) தனியார் பஸ் டிரைவர். இவர் நவீனாவை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த ஆண்டு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே வலது கை வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த செந்தில் ஒரு மாத சிகிச்சைக்குப் பின் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஜூலை 3ம் தேதி புகார் கொடுத்தார்.

அதில் நவீனாவின் பெற்றோர் துாண்டுதலின்பேரில் தன்னை கை, கால்களை வெட்டி ரயில் பாதையில் வீசி விட்டுச் சென்றதாக தெரிவித்திருந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நவீனா பெற்றோர் மீது செந்தில் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நவீனா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்திலை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வந்த செந்தில், நவீனா வீட்டிற்கு சென்று அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், பிளஸ் 2 முடித்த நவீனா மேற்படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நவீனா தனது 14 வயது தங்கை மற்றும் 11 வயது தம்பியுடன் வீட்டில் இருந்தார்.
அப்போது நவீனாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், அவரது தங்கை, தம்பியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். பின், பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் மரணமடைந்தார். படுகாயமடைந்த நவீனா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீனா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் நவீனா உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது விழுப்புரத்தில் ஒருதலைக்காதலுக்கு இளம்பெண் நவீனா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications