காலங்காத்தாலேயே! அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் நுழைந்த விஜிலென்ஸ்! ரெய்டு!
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சத்யா பன்னீர்செல்வம் 2016 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது வீட்டில் சோதனை நடப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அவரது வீட்டருகே குவிந்து வருகின்றனர்.

சமீபகாலமாக, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டிலும் சத்யா பன்னீர்செல்வத்தின் வீட்டில் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில், சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிட டெண்டரில் ₹20 லட்சம் பண மோசடி செய்ததாகக் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாகவும், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு மொத்தம் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக, முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த முறை 9 மணி நேரம் சோதனை நடத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications