மன்மோகன் சிங் பிரைம் மினிஸ்டர் அல்ல.. 'கிரைம்' மினிஸ்டர் - கூடங்குளம் போராட்டக் குழு
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கை கிரைம் மினிஸ்டர் என்று அணு சக்திக்கு எதிரான இயக்கம் வர்ணித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வரும் இந்த இயக்கம் பிரதமரை கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மக்களின் அணு பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் தவறி விட்டார் என்றும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தங்களது மெகா அணு உலைத் திட்டத்தை குஜராத்தில் நிறுவவும் அவர் துணை போய் வருகிறார் என்றும் அது கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக
அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக பிரதமர் நடந்து வருகிறார். இதற்காகவே நீர்த்துப் போன அணு விபத்து இழப்பீடு சட்டத்தையும் அவர் கொண்டு வந்துள்ளார்.

ஈசியாக தப்பி விடலாம்
இதன் மூலம் அணு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் தப்பி விட முடியும். போபாலில் விஷ வாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்சன் தப்பியது போல.

இது பிரிவினைச் சட்டம்
இந்த சட்டம்தான் உண்மையில் பிரிவினைவாத சட்டமாகும்.

அவநம்பிக்கைக்குரிய பிரதமர்
பிரதமர் மன்மோகன் சிங் செயல்படாதவராக இருக்கிறார். அவ நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். பதவிக்காலம் முடியப் போகும் இந்த சமயத்திலாவது அவர் உறுதியான முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும். நல்ல திட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். தனது அமெரிக்க பயணத்தை அவர் ஒட்டுமொத்தமகா ரத்து செய்ய வேண்டும்.அடுத்த அரசு அமையும் வரை அணு சக்தி தொடர்பான திட்டங்களை நிறுத்த வேண்டும்.

யாருக்கு இவர் பிரதமர்...
இவர் இந்தியாவுக்குப் பிரதமரா அல்லது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற பிறநாடுகளுக்கும், அவற்றின் நிறுவனங்களுக்கும் பிரதமரா.. என்று அந்த அறிக்கை கேட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications