காவிரி வராவிட்டாலும் தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா - ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு நீர் திறப்ப
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருவதால் ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு கங்கை திட்டத்தின் படி ஆண்டு தோறும் தமிழகத்துக்கு ஆந்திர அரசு 15 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். கிருஷ்ணா கால்வாயில் வரும் வழியில் 3 டி.எம்.சி. தண்ணீர் சேதாரம் போக மீதி 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் வந்து சேரும்.

ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள அணை, ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணை தனது கொள்ளவை எட்டியது. அந்த அணையின் நீர் மட்டம் 885 அடி ஆகும். தற்போது 881.70 அடி நீர் மட்டம் இருக்கிறது.
ஸ்ரீசைலம் அணை நிரம்பி வருவதால் அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் கண்டலேறு நீர்தேக்கத்துக்கு செல்லும். ஆந்திரா அமைச்சர் உமா மகேஸ்வரராவ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. கண்டலேறு நீர்தேக்கத்தை அடைந்து அங்கிருந்து சென்னை ஏரிகளுக்கு அனுப்பப்படும் என்று ஆந்திரா அமைச்சர் உமா மகேஸ்வரராவ் கூறியுள்ளார்.
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர், திருப்பதி, காளஹஸ்தி வழியாக கிருஷ்ணா கால்வாயில் 152 கி.மீ. தூரத்தை கடந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை அடையும். பின்னர் அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீரை விட கர்நாடகா அடம் பிடித்து வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தில் அணைகள் நிரம்பி வழிவதால், சென்னையின் குடிநீர் தேவைக்காக தற்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications