பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை: முதல்வருக்கு அப்பாவு கடிதம்
சீன தயாரிப்பான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன லைட்டருக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பெட்டி தொழில் கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியத் தேவையில் 80 சதவீதம், பன்னாட்டுச் சந்தையில் 50 சதவீத தீப்பெட்டிகள் தமிழகத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ 600 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

சில ஆண்டுகளாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் வருகையால் தீப்பெட்டி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தற்போது பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களும், உதிரிபாகங்களும் நேபாளம் வழியாக கொண்டு வரப்பட்டு நாடு முழுவது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், தீப்பெட்டி விற்பனை மிகவும் குறைந்து தொழிற்சாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பாவு முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது-
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத்தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2022ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதியன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் மூலமாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். மேலும், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications