அரக்கோணம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: 4-வது முறையாக வாகை சூடிய திமுக ஜெகத்ரட்சகன்!
அரக்கோணம்: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெகத்ரட்சகன் 4-வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 6 முறை, திமுக 3 முறை, அதிமுக 2 முறை, பாமக ஒரு முறை வென்றுள்ளன. இத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அதிகபட்சமாக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2004-ல் வென்ற பாமகவின் வேலுவும் மத்திய அமைச்சராக பணிபுரிந்தவர்.

தற்போதைய தேர்தலில் ஜெகத்ரட்சகன் (திமுக) ஏஎல் விஜயன் (அதிமுக) கே.பாலு (பாமக) அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் களம் கண்டனர்.
தற்போதைய நிலவரம்:
இத்தொகுதியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்தார் ஜெகத்ரட்சகன்.
முடிவுகள் விவரம்:
ஜெகத்ரட்சகன் (திமுக) 563216
விஜயன் (அதிமுக) 256657
பாலு (பாமக) 202325
அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர்) 98944
மொத்தம் 3,06,559 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் அபார வெற்றியை அறுவடை செய்தார்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: அரக்கோணம் (தனி), சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி மற்றும் திருத்தணி.
அரக்கோணம் மொத்த வாக்காளர்கள்: 15,53,989; ஆண்கள்- 7,56,194; பெண்கள்- 7,97,632; 3-வது பாலினத்தவர் 163.
முந்தைய தேர்தல் முடிவுகள்: 1999, 2009, 2019 ஆகிய 3 தேர்தல்களில் வென்ற ஜெகத்ரட்சகன் இம்முறையும் திமுக வேட்பாளராக களம் கண்டனர். திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பு திமுக கூட்டணி கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக இருந்தது.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன்(திமுக) 4,15,041
வேலு (பாமக) 3,05,245
சங்கர்(தேமுதிக) 82,038
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஹரி (அதிமுக) 4,93,534
என். ஆர். இளங்கோ(திமுக) 2,52,768
வேலு(பா.ம.க) 2,33,762
நாசே ராஜேஷ்(காங்கிரஸ்) 43,960
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,72,190
ஏகே மூர்த்தி (பாமக)- 3,43,234
பார்த்திபன் (அமமுக)- 66,826
பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) 29,347
ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 23
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications